டெல்லி : மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி, சாதாரண ரயில் Non AC (Non Suburban) 2ஆம் வகுப்புக்கு 500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை, 501 – 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5, 1500 – 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10, 2501 – 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்த்தப்படுகிறது. மேலும் ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்படுகிறது.
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்:
NON AC
ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிப்பு
AC Coach
குளிர்சாதன வசதி: இருக்கை
குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
அதே போல், புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.