பயிற்சி: Trade Apprentice.
மொத்த காலியிடங்கள்: 2424.
வயது: 15.07.2024 அன்று 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ யில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/Fitter/Plumber/Painter/Welder/ Gas & Electric/Diesel Mechanic/Machinist/Trimmer/Turner/Carpenter/Tailor/PSAA/ Lab Assistant/Electronic Mechanic/Sheet Metal Worker/Machine Tool Maintenance Mechanic/COPA.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.rrccr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2024.