சென்னை: ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு டிக்கெட்டுகள் எண்ணிக்கை 25% வரை மட்டுமே வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களில் மொத்த இருக்கைகள் எண்ணிக்கையில் 25 சதவீதம் மட்டுமே காத்திருப்பு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஏராளமான பயணிகளுக்கு காத்திருப்பு டிக்கெட் வழங்கப்படுவதால் டிக்கெட் உறுதியாகாமல் பலர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். காத்திருப்பு டிக்கெட் வைத்துக் கொண்டு ஏராளமான பயணிகள், ரயில்களில் ஏறுவதை கட்டுப்படுத்தவும் 25% என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
ரயில் காத்திருப்பு டிக்கெட் 25% என வரம்பு நிர்ணயம்..!!
0