திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஜெயம் நகரை சேர்ந்தவர் விவேக்(33). மனைவி ஷாலினி(23). மகள் விசாகா(2). தற்போது ஷாலினி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த வாரம் மகள் விசாகாவிற்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர் அன்று இரவே விவேக்கிற்கு உடல்நலமில்லாமல் போனதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், 4 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி செப்.29ம் தேதி உயிரிழந்தார். கணவன் இறந்த சோகத்தில் ஷாலினி மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து ஷாலினி, மகள் விசாகாவுடன் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள பராமரிப்பு இல்லாத கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மகன் உயிரிழந்ததை தொடர்ந்து, மருமகளும், பேத்தியும் தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த மாமனார் ரவிச்சந்திரனும் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.