நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அடுத்து இரு நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அரசு தாவரவியல் பூங்கா உட்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நடுவட்டம் – கூடலூர் இடையே சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தற்காலிகமாக இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம். சுற்றுலா பயணிகள் வாகனங்களும் பாதுகாப்புடன் இயக்க மாவட்ட நிர்வாகம் அறுவத்தி உள்ளது இரவு நேரங்களில் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
உதகை-கூடலூர் சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
0