திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாலுகா சப் – இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருப்பாச்சூர், பட்டரைபெரும்புதூர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டரைப்பெரும்புதூர் டோல்கேட் பகுதியில் ஒரு நபர் சாலையில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்வோரை தகாத வார்த்தையால் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பது தெரிய வந்தது. இதையடுத்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது
0