புதுச்சேரி: தீபாவளியையொட்டி புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் புதுச்சேரி நகருக்குள் குறிப்பிட்ட சாலைகளில் கனரசு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.