0
கோவை: கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி ஃபேன் வசதி கொண்ட ஹெல்மெட்டை காவல் ஆணையர் வழங்கினார். முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.