ஊட்டி : ஊட்டி நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குதிரைகள், மாடுகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளான எல்க்ஹில்,வண்டிசோலை,ஓல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்க கூடிய மாடு, ஆடு போன்ற கால்நடைகளை ஊட்டி நகரில் ஆனாதையாக விட்டு விடுகின்றனர்.
இவை ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி ஏலம் நடைபெறும் பகுதியை முற்றுைகயிட்டு காய்கறி கழிவுகளை உட்கொள்கின்றன. தொடர்ந்து மார்க்கெட் வெளிப்புறம் புளூமவுண்டன்,சேட் மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, மாரியம்மன் கோயில், மணிகூண்டு, கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதுடன் சாலையிலேயே படுத்து கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதேபோல் சவாரிக்கு பயன்படுத்தப்படும் இந்த குதிரைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் திரிய விடுகின்றனர். அவை அவை உணவு, தண்ணீர் ேதடி ஊட்டி நகரின் முக்கிய சாலைகள், உணவகங்கள், மார்க்கெட் பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.கடந்த சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நகருக்குள் குதிரைகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. மீறி கால்நடைகளை ஊட்டி நகரில் வலம் வர விட்டால், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என எச்சரித்தனர்.
இருந்த போதும் கால்நடை உரிமையாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை பிடித்து அபராதம் விதித்து வந்த நிலையில் தற்போது நடவடிக்கை இல்லாததால் ஊட்டி நகரில் மீண்டும் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எட்டின்ஸ் சாலை, ஊட்டி – குன்னூர் சாலையில் ஆவின் அருகே, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குதிரைகள், கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே இவற்றை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.