Wednesday, April 24, 2024
Home » ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு

by Ranjith
Published: Last Updated on

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சேப்பாக்கம் பகுதியில் இன்று மற்றும் போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை அறித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மற்றும் வரும் 12, 21, மே 10, 14 ஆகிய நாட்களில் மாலை 5 முதல் முதல் இரவு 11 மணி வரையிலும் மற்றும் வரும் 30 மற்றும் மே 6ம் தேதி ஆகிய நாட்களில் மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:

  • விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு): இந்த சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
  • பெல்ஸ் சாலை: இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை கூட்ரோடு பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை கூட்ரோடு பெல்ஸ்சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
  • பாரதிசாலை: ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை கூட்ரோடு பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ்சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை கூட்ரோடு பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
  • வாலாஜாசாலை: அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் M, B, D, W ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். வாலாஜா சாலை கூட்டுரோடு பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் P, R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
  • காமராஜர் சாலை: போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் M, P, T, W ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் பி, ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

You may also like

Leave a Comment

eighteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi