செய்யூர்: செய்யூர் அருகே டிரக்டர் மோதி இருந்ததால், அதன் உரிமையாளர் வீட்டின் முன்பு சலவை தொழிலாளி உடலை வைத்து இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த கடுக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த சலவை தொழிலாளி அய்யனார் (60). இவர் நேற்று முன்தினம் மாலை பாலூர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் அய்யனார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட அணைக்கட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று அய்யனாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு டிராக்டர் உரிமையாளர் மோகன் வீட்டு அருகே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இழப்பீடு வழங்கக்கோரி டிராக்டர் உரிமையாளர் வீட்டு அருகே சலவை தொழிலாளி உடலை வைத்து போராட்டம்
0
previous post