ஒசூர் : ஒசூரில் ரூ.100 கோடி செலவில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கிறது விஎஸ்டி டில்லர்ஸ் & டிராக்டர்ஸ் நிறுவனம். விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விஎஸ்டி டில்லர்ஸ் ஆகும். ஒசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம் நிறுவுவதன் மூலம் நிறுவனம் ஆராய்ச்சி மேம்பாட்டு திறன்களை அதிகரிக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.