டெயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், இனோவா கிரிஸ்டா ஜி மற்றும் ஜிஎக்ஸ் வேரியண்ட்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இதன் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.19.13 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கிரிஸ்டா வரிசையில் விஎக்ஸ் மற்றும் இசட் எக்ஸ் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. புதிய வாகன விதிகளுக்கு ஏற்ப இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க விலையாக விஎக்ஸ் எப்எல்டி7 சீட்டர் ஷோரூம் விலை சுமார் ரூ.23.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஎக்ஸ் எப்எல்டி 8 சீட்டர் விலை சுமார் ரூ.23.84 லட்சம். இதுபோல் விஎக்ஸ் 7 சீட்டர் ரூ.23.79 லட்சம் எனவும், விஎக்ஸ் 8 சீட்டர் ரூ.23.84 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இசட் எக்ஸ் 7 சீட்டர் டாப் வேரியண்டாக ரூ.25.43 லட்சம் என உள்ளது.