டோயோட்டா நிறுவனம் தற்போது பெட்ரோல், பெட்ரோல் , டீசல், பெட்ரோல் ஹைபிரிட், சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்டிராங் ஹைபிரிட் என்பதால் 60 சதவீதம் எலக்ட்ரிக்கிலும்,40 சதவீதம் பிளக்ஸ் பியூயலிலும் இயங்கும் என, நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மேற்கண்ட கண்காட்சியில் மாற்று எரிபொருள் அடிப்படையில் 5 கார்களை சந்தைப்படுத்தியுள்ளது.
இவற்றில் இனோவா ஹைகிராஸ் பிளக்ஸ் பியூயல் ஹைபிரிட், ஹைட்ரஜனில் இயங்கும் மிராய் மற்றும் ஹைரைடர் சிஎன்ஜி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இனோவா ஹைகிராஸ் பிளக்ஸ் பியூயல் காரில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜினும், எலக்ட்ரிக் மோட்டாரும் இடம் பெற்றுள்ளது. இதிலும் 20 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்த முடியும்.