டொயோட்டா நிறுவனம், ஹைலக்ஸ் பிக்அப் வாகனங்கள் வரிசையில், ஐஎம்வி 0 கான்செப்ட் மாடல் அடிப்படையில் சிறிய ரக பிக்அப் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், இன்னோவா கிறிஸ்டாவில் உள்ள 2.4 லிட்டர் இன்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டாரும் கூடிய ஸ்டிராங் பெட்ரோல் ஹைபிரிட் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியச் சந்தையிலும் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படும் என நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜப்பானில் இந்த ஆண்டு நடந்த வாகனக் கண்காட்சியில் ஐஎம்வி 0 கான்செப்ட் பிக் அப் வாகனம் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.