டொயோட்டா நிறுவனம், இனோவா ஹைகிராஸ் இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் (ஓ) கார்களுக்கான முன்பதிவை கடந்த மே மாதம் நிறுத்தி வைத்திருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததால் முன்பதிவு நிறுத்தப்பட்டதாகவும், இந்த வேரியண்ட்களுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கியுள்ளதாகவும் இந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த காரில், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 184 எச்பி பவரையும், 188 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். விஎக்ஸ், விஎக்ஸ் (ஓ), இசட்எக்ஸ், இசட்எக்ஸ் (ஓ)என்ற 4 டாப் வேரியண்ட்கள் உள்ளன. இந்த ஆண்டில் இக்காருக்கான முன்பதிவு 2 முறை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.