டோயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் மைல்டு ஹைபிரிட் வேரியண்டை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து பார்ச்சூனர் கார்களின் விலையை ரூ.68,000 வரை உயர்த்தியுள்ளது. இதன்படி பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.35.37 லட்சத்தில் இருந்து ரூ.68,000 உயர்த்தப்பட்டு ரூ.36.05 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷோரூம் விலை ரூ.36.33 லட்சத்தில் இருந்து ரூ.40,000 உயர்த்தப்பட்டு ரூ.36.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல், டீசல், லெஜண்டர், ஜிஆர்-எஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விலை ரூ.40,000 உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர பிளாட்டினம் பியர்ல் வண்ணத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரூ.15,000 அதிகம்.