டொயோட்டா நிறுவனம், பார்ச்சூனர் மைல்டு ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 எச்பி பவரையும் 50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர, 48 வோல்ட் ஹைபிரிட் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஹைரைடர் மற்றும் கிளான்சா மைல்டு ஹைபிரிட் வேரியண்ட்களுடன் நியோ டிரைவ் என சேர்க்கப்பட்டது போல, பார்ச்சூனர் மைல்டு ஹைபிரிட் வேரியண்டில் நியோ டிரைவ் பேட்ச் இடம் பெறும். 360 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள், ஹில் அசென்ட் மற்றும் டிசன்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.44.72 லட்சம்.