இடைப்பாடி, ஆக.28: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கப்படுவதால், இப்பகுதி கடல்போல் காட்சி அளிக்கிறது. அதனால், குட்டி கேரளா என அழைக்கப்படும் பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து குவிந்த சுற்றுலா பயணிகள் விசைப்படகியில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இங்குள்ள நீர்மின் கதவணை பாலம், பஸ் நிலையம், கைலாசநாதர் கோயில், மூலப்பாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.