நீலகிரி: நாளை முதல் 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அங்காங்கே கனமழை, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவுகிறது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டும், கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.