குமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குமரி கடல் நீர்மட்டம் நிலையற்ற தன்மையாலும், அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்படுவதாலும் படகு சேவை நிறுத்தம். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.