சென்னை: சென்னை மாவட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோர், சுற்றுலா விருது பெற ஆக.20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களான விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா பயணமுகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகள் 27-9-2024 அன்று வழங்கப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் செப்.27ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம்.
ஆக.20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி. கூடுதல் விவரங்களுக்கு சென்னை சுற்றுலா அலுவலகம், மற்றும் 9444823111, 8667012477 ஆகிய எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.