சிலர் கோடை விடுமுறையில் சுற்றுலாத் தலங்கள் அதீத கூட்டமாக இருக்கும் என்பதாலேயே அடுத்து வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என சுற்றுலாவிற்கு செல்வார்கள். பொதுவாக இந்த வேளையில் கொஞ்சம் மழையும், காற்றுமாக, உடன் வெயிலும் இணைய டிராவல் விரும்பிகளுக்கு அருமையான காலம். மேலும் அடுத்தடுத்து தீபாவளி, உள்ளிட்ட திருவிழாக்கள் வரிசை கட்டும் நேரம் என்பதால் சிலருக்கு போனஸ், உள்ளிட்டவைகளும் வரும் என்பதால் இதை
* பயணம் செல்வதற்கு முன்பே, வீட்டில் செய்தித்தாள் போடுவதை நிறுத்திவிட வேண்டும். அல்லது அக்கம்பக்க வீட்டில் சொல்லி, அவர்கள் எடுத்து வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டின் கதவருகில் பல நாள் செய்தித்தாள்கள் எடுக்கப்படாமல் இருப்பது திருடர்களுக்கு செய்தி அனுப்பும்.
* உங்கள் வீட்டுச்சாவி ஒன்றை உங்களுக்கு நம்பிக்கையான அருகில் உள்ளவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்லவும். மின்சாரக் கோளாறு, சிலிண்டரில் ஏதாவது கசிவு, தண்ணீர்த் தொட்டியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் உடனே உங்கள் வீட்டைத் திறந்து பார்த்து சரி செய்ய முடியும்.
* வளர்ப்புப் பிராணி வைத்திருப்பவர்கள் அவற்றைத் தனியே விட்டுப் போகாதீர்கள். அவை சத்தம் போட்டு ஊரைக் கூட்டிவிடும். தகுந்த நபர்களிடம் நீங்கள் வரும்வரை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள்.
* பஸ், ரயில், விமானம் இவற்றில்நீங்கள் பயணிப்பது எதில் என்பதை முடிவு செய்துகொண்டு அதற்கு ஏற்றபடி பேக்கிங் செய்யவும்.
* ரயிலில் முதியவர்களுடன் பயணம் செய்தால் அவர்களுக்கு லோயர் பர்த் கிடைக்குமாறு டிக்கெட் புக் செய்யவும். பயணத்தின் போது ஜன்னல் பக்கம் தலை வைத்துப் படுப்பதை பெண்கள் தவிர்க்கவும். நகைகள் திருடு போகும் அபாயம் உண்டு.
* பயணம் செல்லும்போது பழைய செய்தித்தாள்களை நிறைய எடுத்துச் செல்லுங்கள். அவசரத்துக்கு எங்கும் கீழே போட்டு அதில் அமர்ந்தால் உடைகள் பாழாகாது. செல்லோடேப்பும் எடுத்துச் சென்றால், நியூஸ் பேப்பரை விரித்து டேப் போட்டு ஒட்டினால் பெரிய பெட்ஷீட் அளவு வந்துவிடும். காத்திருக்கும் நேரங்களில், அதை விரித்துப்போட்டு ஓய்வெடுக்கலாம்.
*வீட்டிலிருந்து கிளம்பும்போது குடும்பத்தினர் ஒவ்வொருவரிடம் தனித் தனியாக சிறிதளவு பணம் கொடுக்கவும். அனைவரது போன் நம்பர்களும் அவரவர்களிடம் இருக்க வேண்டும். சுற்றுலா போகும் இடத்தில் கூட்டத்தை விட்டு பிரிந்து நாம் எங்காவது சென்றுவிட்டால், நாம் இருக்கும் இடத்தை அவர்கள் போன் செய்து கண்டறியமுடியும்.
*நிறைய சில்லறைக்காசுகள் கையில் எடுத்துக் கொள்ளவும். காபி, டீ, பூ வாங்குதல், சில இடங்களில் நுழைவுச்சீட்டு வாங்குதல் போன்றவற்றுக்கு அங்கே போய் சில்லறை தேடிக் கொண்டிருக்க முடியாது.
*குளிர்ப் பிரதேசங்களுக்கு செல்கிறீர்கள் என்றால் ஸ்வெட்டர், சாக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். வெயில் அதிகமுள்ள இடம் என்றால் குடை, கறுப்புக்கண்ணாடி, தொப்பி எடுத்துக்கொள்ளவும்.
*போகிற இடத்தில் உறவினர்கள் வீடுகளில் தங்குகிறீர்கள் என்றால் உங்கள் வருகையை முன் கூட்டியே அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். அவர்களின் விடுமுறை நாட்களில் நாம் அங்கு செல்லுமாறு பிளான் போட்டால், அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்.
*சீரகம் போட்டு காய்ச்சி வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது. தொண்டைக்கோளாறும் ஏற்படாது. முடிந்தவரை காய்ச்சிய தண்ணீர் குடியுங்கள். செயற்கைப் பானங்கள் எதுவும் குடிக்காமல் இளநீர், நம் கண்ணெதிரே போடும் ஜூஸ்கள் ஆகியவற்றைக் குடிக்கலாம்.
*தலைவலி, வயிற்றுவலி, தசைப்பிடிப்பு இவற்றுக்கான மாத்திரைகள், ஆயின்ட்மென்ட்டுகள், பேண்டேய்ட், காட்டன் இவற்றைக் கைவசம் வைத்திருங்கள். தவிர ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் அவற்றைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
*பிரெட், வாழைப்பழம், பிஸ்கட், வீட்டில் செய்த முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். பயணம் செய்யும்போது அருகில் ஹோட்டலோ, உறவினர்கள் வீடோ இல்லாதபோது இவை கை கொடுக்கும்.
*லாட்ஜில் தங்குவது மாதிரி பிளான் இருந்தால் பெட்ஷீட் எடுத்துச் செல்வது அவசியம். அங்குள்ள கட்டிலின் மீது போட்டிருக்கும் விரிப்புகளின் மேலே போட்டு படுப்பதற்கும், கீேழ விரித்துப் படுப்பதற்கும் இவை உதவும்.
*எண்ணெய், பேஸ்ட், முகத்துக்கு போடும் க்ரீம்கள் இவற்றை நிறைய சாஷேக்களில் எடுத்துச் சென்றால்ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகஒவ்வொன்று கொடுத்துவிடலாம்.
*இஞ்சிமுரப்பா, சிறிய சைஸ் பிளாஸ்டிக் பைகள் எடுத்து வைத்துக் கொண்டால் பயணத்தின்போது ஏற்படும் வாந்தி, வயிற்றுப் புரட்டல் போன்றவற்றை சமாளிக்கலாம். கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் (தட்டு, டம்ளர், பைக்) எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
*நாம் பொருட்களை பேக் செய்து எடுத்துச் செல்லும் பைகள், நமது ஊரில் உள்ள பிரபலமான துணிக்கடை, நகைக் கடை ஆகியவற்றில் கொடுத்தவையாக இருக்க வேண்டாம். அதே மாதிரி பைகள் நிறைய பேர்களிடம் இருக்கும். என்பதால் ரயில், பஸ்ஸில் பைகளை மற்றவர்கள் மாற்றி எடுத்துச்செல்வதற்கு வாய்ப்பு உண்டு.
*செல்போனுக்கு சார்ஜர், பவர் பேங்க் ஆகியவற்றை கண்டிப்பாகஎடுத்துச் செல்லவும்.
*செல்போன்களுக்கு கவர் போட்டு எடுத்துச் செல்வதும், சூட்கேசுக்கு கவர் போட்டு எடுத்துச் செல்வதும் அவசியம். சூட்கேஸ் கவரின் உட்புறம் நமது போன் நம்பர் எழுதி வைப்பது அவசியம்.
*வட்டுப் பத்திரம் போன்ற முக்கியமான ஆவணங்களை, நகைகளுடன் சேர்த்து லாக்கரில் வைத்துவிடலாம். நாம் ஊரில் இருந்து வந்தவுடன் எடுத்துக் ெகாள்ளலாம். இவற்றை வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குப் போகவேண்டாம்.
* இப்போது வெயில் அதிகமாக இருப்பதால் நமது வீட்டில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்கு யாரையாவது ஏற்பாடு செய்துவிட்டுப் போகலாம்.
* வீட்டில் டி.வி., மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் பிளக்குகளை நாம் ஊருக்குச் செல்லும்போது கழற்றிவிட்டுச் செல்லலாம். இதனால் எதிர்பாராதவிதமாக மின்சாரக் கோளாறு ஏற்பட்டாலும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.
– இரா. அமிர்தவர்ஷினி