கிரகங்கள் யாவும் தங்கள் பயணங்களை நட்சத்திரங்களிலேயேதான் கடந்து செல்கின்றன. கிரகங்களின் பாதங்களில் அமர்ந்துள்ள நட்சத்திரங்களும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
கிரகங்களில் வேகமாக பயணிக்கும் கிரகம் சந்திரன் மட்டுமே. இந்த சந்திரனையே மனோகாரகன் என்றும் உடலுக்கு காரகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. சந்திரனே மனத்தின் இயக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாக இருப்பதால். அந்த சந்திரன் அமர்ந்துள்ள நட்சத்திரத்தின் வழியே நமது அதிர்ஷ்டங்களை விஸ்தரித்துக் கொள்ளலாம். பலரும் அறிந்திடாத யாரும் கூறாத அதிர்ஷ்டங்களுக்கான தாந்தீரிகப் பரிகாரங்கள் இதோ…
அஸ்வினி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் உளுந்து வெல்ல உருண்டை தானம் கொடுத்துவிட்டு பின் சாப்பிடவும் வெண் குங்கிலியத்தை வெள்ளைத் துணியில் கட்டி வீட்டிலே நெய்தீபம் ஏற்ற வேண்டும் எந்த ஒரு தானம் செய்தாலும் வடக்குத் திசை நோக்கி தானம் கொடுக்கவும் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
பரணி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் வெல்லம் எள் அன்னம் கலந்து செவ்வலரியுடன் தானம் செய்யவும் தெற்கு திசை நோக்கி கறுப்பு வஸ்திரம் தானம் செய்ய வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் நெய் தேன் கலந்து தானம் கொடுத்த பின் சாப்பிடவும் அல்லது அம்பாள் ஆலயத்தில் சிவப்பு வஸ்திரத்துடன் நெய் தேன் கொடுத்து வர வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
ரோகிணி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் ஏழு வகை தானியங்கள் சாமை கோதுமை நெல் கேழ்வரகு கம்பு சோளம் உளுந்து கொண்டைக்கடலை கஸ்தூரி இவை அனைத்தும் கிழக்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் வெண்சந்தனம் வெண்மை வஸ்திரம் முல்லைப்பூ பால் பாயசம் ஆகியவற்றை ஏதாவது ஒன்று அல்லது எல்லாவற்றையும் வடக்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் கருங்குளியம் வெள்ளைத்துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலை வெள்ளை சந்தனம் வெள்ளை வஸ்திரம் வடக்கு நோக்கி தானம் செய்ய தடைகள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் சாம்பிராணியுடன் சந்தனத் தூள் சேர்த்து தூபம் போடவும். மல்லிகைப்பூ சர்க்கரைப் பொங்கல் சிவன் கோவிலுக்கு தானம் கொடுக்க தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூசம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் அகில் தூள் சாம்பிராணி உடன் சேர்த்து தூபம் போட வேண்டும். குங்குமப்பூ கலந்த சந்தனம் கல்கண்டு வெண்பொங்கல் செந்தாமரை பெருமாள் கோயிலுக்கும் நரசிம்மர் கோவிலுக்கும் தானம் செய்ய மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
(பரிகாரங்கள் தொடரும்…)