கிரகங்கள் யாவும் தங்கள் பயணங்களை நட்சத்திரங்களிலேயேதான் கடந்து செல்கின்றன. கிரகங்களின் பாதங்களில் அமர்ந்துள்ள நட்சத்திரங்களும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
கிரகங்களில் வேகமாக பயணிக்கும் கிரகம் சந்திரன் மட்டுமே. இந்த சந்திரனையே மனோகாரகன் என்றும் உடலுக்கு காரகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. சந்திரனே மனத்தின் இயக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாக இருப்பதால். அந்த சந்திரன் அமர்ந்துள்ள நட்சத்திரத்தின் வழியே நமது அதிர்ஷ்டங்களை விஸ்தரித்துக்கொள்ளலாம். பலரும் அறிந்திடாத யாரும் கூறாத அதிர்ஷ்டங்களுக்கான தாந்தீரிகப் பரிகாரங்கள் இதோ…
கேட்டை நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தயிர் சாதம் சித்ரா அன்னம் எள் இவற்றை தெற்கு அல்லது மேற்கு நோக்கி தானம் செய்ய தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் அடிக்கடி கிழங்குகள் சாப்பிட வேண்டும். வெற்றிலைக் கொடி வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். நெய் சோறு அல்லது ஆடு மேற்கு திசை நோக்கி தானம் செய்ய தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூராடம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் சிவப்பு சம்பா சோறு தானம் செய்யவும். தினமும் வீட்டில் சாம்பிராணியுடன் மனோசீலை பொடி சேர்த்து தூபம் போடவும். வெள்ளை அலரி பூ கன்னிப் பெண்களுக்கு தானம் செய்யவும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
உத்திராடம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தினமும் வீட்டில் சாம்பிராணியுடன் விளாமிச்சை வேறு சேர்த்து தூபம் போடவும். நெல் வறுத்து மாவு செய்து பாசிப்பயறுடன் சேர்த்து தானம் செய்யவும். ஐந்து வெவ்வேறு நிறம் உள்ள பூக்கள் சிவன் கோயிலுக்கு கொடுத்து வரவும். தோஷங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் பௌர்ணமி அன்று விரதம் இருந்து சம்பா அரிசி மாவில் உருண்டை செய்து தானம் செய்யவும். பெருமாள் கோயிலுக்கு பச்சை கற்பூரம் குங்குமப்பூ துளசி கொடுத்து வரவும் தினமும் வீட்டில்சாம்பிராணி உடன் தசாங்கம் சேர்த்து தூபம் போடவும் தோஷங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் எள் அரிசி கலந்த பாயசம் சந்தனம் செந்தாமரை இவற்றை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தானம் செய்ய தோஷங்கள் நீங்கி பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
சதயம் நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் அரிசி மாவு தானம் செய்யவும். நெய் அன்னம் பச்சைக் கற்பூரம் தானம் தாமரை மலர் இவற்றையெல்லாம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சிவன் கோயிலில் தானம் செய்ய தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூரட்டாதி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் தேன் குங்குமப்பூ குங்குமம் சிவன் கோயிலில் தானம் செய்யவும். தினமும் வீட்டில் சாம்பிராணி உடன் எருக்கம் பூ சேர்த்து தூபம் போட வேண்டும் தோஷங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் சம்பா அரிசி தானம். உளுந்து நெய் கலந்து தாமரைப்பூவுடன் வடக்கு நோக்கி தானம் செய்யவும் தோஷங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் பரிகாரம் நவதானியத்தை அரைத்து மாவு செய்து எள்ளு சாதமும் செய்து மந்தாரைப் பூ தாமரைப்பூவுடன் சேர்த்து கிழக்கு நோக்கி தானம் செய்ய வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.