சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பாகிஸ்தான், சீனா அணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நநாளை தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணி நேற்று அட்டாரி வாகா எல்லையை கடந்து இந்தியா வந்தனர். தொடர்ந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களுக்கு மேல தாளங்கள் முழங்க கரகாட்டம், மயிலாட்டம் கலைஞர்களின் நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல போட்டியில் பங்கேற்பதற்காக சேவை சேர்ந்த ஆடவர் ஹாக்கி அணிக்கும் சென்னை விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.