உத்தராகண்ட்: உத்தரகாண்டில் புதிய உச்சத்தை தொட்ட தக்காளியின் விலை கிலோ ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. உத்தரகாசி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.
வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனிடையே தக்காளி விலை சற்று குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் யாரும் எதிர்பாரா வகையில் தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்து, தக்காளி வாங்கவே யோசிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.