Saturday, June 14, 2025
Home செய்திகள் சுங்கவரித்துறை அலுவலகத்தில் வேலை

சுங்கவரித்துறை அலுவலகத்தில் வேலை

by Porselvi

 

பணியிடங்கள் விவரம்:

1. சீ மேன்: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000.
2. கிரீசர்: 7 இடங்கள்: (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.18,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. டிரேட்ஸ்மேன்: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900. தகுதி: மெக்கானிக்/டீசல்/ பிட்டர்/டர்னர்/வெல்டர்/எலக்ட்ரீசியன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன்/கார்பென்டரி பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் பெட் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cbic.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2025.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi