டெல்லி: இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தேவையான கருவிகளை உருவாக்க வேண்டும். சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தால் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் ஃபாஸ்டேக் வாங்குவது கட்டாயமாகும். ஜூலை 15 முதல் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டண வசூலை முறைப்படுத்தும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம்?
0
previous post