சென்னை: தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்கள் தொடர்பாக ஆய்வு, ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 70 மாணவர்களுக்கு தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.