லத்தீன் அமெரிக்கா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்னிவல் எனப்படும் கேளிக்கை விழா உச்சகட்ட குதூகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரேசிலின் அமேஸான் நகரில் காளைகளை போல் வேடமணிந்தவர்கள் தெருக்களில் வாத்தியங்களை இசைத்தப்படியும், நடமாடியபடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரில் தொடங்கிய கார்னிவல் திருவிழா ஆண்டுக்கு ஆண்டு உற்சாகம் குறையாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.