டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்றிரவு திடீரென சென்றிருந்தார். அங்குள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.