கென்னிங்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில், 5விக்கெட், 2வது டெஸ்ட்டில் 190ரன் வித்தியாசங்களில் இங்கிலாந்து அபார வெற்றிப் பெற்றது. இந்த 2 டெஸ்ட்களும் ஒருநாள் ஆட்டம் முழுமையாக எஞ்சியிருந்த நிலையில் 4வது நாளே முடிவுக்கு வந்தது. தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையை தொடர்வதுடன், இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் 3வது டெஸ்ட் கென்னிங்டன்னில் இன்று தொடங்குகிறது.
ஆலிவர் போப் கேப்டனான முதல் ஆட்டத்திலேயே இங்கிலாந்து வெற்றி வாகை சூடியதுடன் தொடரையும் கைப்பற்றி உள்ளது. அதே உற்சாகத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து இந்த டெஸ்ட்டிலும் வென்று தொடரை கைப்பற்ற ஜோ ரூட், கெஸ் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் ஸ்டோன், சோயிப் பஷீர் ஆகியோர் அதிரடி காட்டக்கூடும். அதே நேரத்தில் தனஞ்ஜெயா டி சில்வா புதுக் கேப்டன் ஆனதும் முதலில் ஆப்கானிஸ்தான், அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இப்போது தொடரையே இழந்து விட்டது. இன்று தொடங்கும் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி கிடைத்தால் ஒயிட வாஷ் ஆவதில் இருந்து தப்பிக்க முடியும். அதற்கு கேப்டன் டி சில்வா மட்டுமின்றி அணியில் உள்ள மற்ற வீரர்களும் ‘விளையாட’ வேண்டியது அவசியம்.