Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவுடன் இன்று கடைசி டி20 போட்டி; ஒயிட் வாஷை தடுக்குமா இலங்கை

புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் 2வது டி20 போட்டியில் அவர் ஆடவில்லை. இதையடுத்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் சுப்மன் கில் உடல் நிலை சீரானதால் இன்று நடைபெறும் 3வது போட்டியில் கில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்பீர் மற்றும் சூர்யகுமார் கூட்டணியிலான இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி விட்டதால் இன்று நடக்கும் 3வது டி20 போட்டி சம்பிரதாய போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் தொடரில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம். அந்த வகையில் சிவம் துபே, கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, பிஷ்னோய் ஆகியோர் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கின்றனர். இந்தநிலையில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த இலங்கை அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற கடுமையாக போராடும். அதோடு ஒயிட் வாஷ் ஆவதை தடுக்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.