சென்னை: இன்று 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் மருத்துவ முகாமில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வாரந்தோறும் மருத்துவ வட முகாம்கள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.