Friday, April 12, 2024
Home » பண்ணைசாரா கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் கடன் தீர்வு ஒப்பந்தம் செய்து பயன் பெற இன்று கடைசி: கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

பண்ணைசாரா கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் கடன் தீர்வு ஒப்பந்தம் செய்து பயன் பெற இன்று கடைசி: கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

by Ranjith

செங்கல்பட்டு: பண்ணை சாரா கடன் பெற்று கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் உள்ள கடன்தாரர்கள், கடன் தீர்வு பெற ஒப்பந்தம் செய்து பயன்பெற இன்று கடைசி நாள் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்ணைசாராக் கடன் திட்ட சிறப்பு முகாம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணைசாராக் கடன்கள் பெற்று 31.12.2022 அன்று கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து. கடன் தவணை தவறி 13.12.2023 அன்று நிலுவையில் உள்ள கடன்களுக்கு கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் வரை அசலுக்கு 9 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும் எனவும், இதன்படி கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் என மொத்தம் 105 கூட்டுறவு நிறுவனங்களால் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடத்தப்பட்டது.

பண்ணைசாராக் கடன் பெற்று கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருந்த பயனாளிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களில் கலந்து கொண்டு இந்த திட்டம் பற்றிய விவரங்களையும், இத்திட்டத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டால் கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினம் மற்றும் வட்டி தள்ளுபடி குறித்த விவரங்களை அறிந்து கொண்டனர்.

இத்திட்டத்தில் பயனாளிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள 12.3.2024 வரை கால அவகாசம் உள்ளது. எனவே, கடன் பெற்ற தகுதியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு நிறுவனத்தினை தொடர்பு கொண்டு 12.3.2024க்குள் இத்திட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசு அளிக்கும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கடனை தீர்வு செய்து பயன்பெறலாம் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

eight + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi