ராமேஸ்வரம்: மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோதும் கச்சத்தீவை மீட்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.