சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது.
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இப்பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வுபெற வேண்டும், ஆனால் சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது, எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.