சென்னை: டிஎன்பிஎஸ்சி தொகுதி 4க்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4க்கான காலி பணியிடங்கள் 25,000 ஆக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. தகுதி பெற்றவர்களில் 20,000 பேரையாவது தேர்ந்தெடுத்து கலந்தாய்வை நடத்த எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார்.