சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும், குரூப் 2ஏவில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும், இந்தாண்டு குரூப் 2 தேர்வில் நேர்காணல் கிடையாது. தமிழ்நாடு வனச் சார்நிலை பணி மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தில் கீழ் வனவர் பதவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தமிழக முழுவதுதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி, முதல்நிலை எழுத்துத் தேர்வானது செப்டம்பர் 14ம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.