சென்னை : டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு மாதத்தில் வழக்கை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி சேஷசாயி உத்தரவு பிறப்பித்துள்ளார்.