சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய இரண்டு தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொதுப்பணியில் சுற்றுலா அலுவலர் பதவியில் காலியாக உள்ள 3 காலி பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 10.06.23 மற்றும் 11.6.23 அன்று நடத்தியது. இதில் தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு 9 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சி துறையில் உதவி ஆணையர் (குரூப் 1பி) பதவியில் காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கு கடந்த 12.7.24 அன்று தேர்வு நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 219 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி ேதர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.