சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.ஏஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வரும் எஸ்.கே.பிரபாகர், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், 2028
ஜனவரி மாதம் வரை பதவி வகிப்பார்.