கோவை: 8அணிகள் பங்கேற்றுள்ள 9வது சீசன் டிஎன்பிஎல் டி.20 தொடரில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் கோவை-மதுரை அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கோவை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாருக்கான் 77, சுரேஷ் லோகேஷ்வர், ஆண்ட்ரே சித்தார்த் தலா 20ரன் அடித்தனர்.
பின்னர் களம் இறங்கிய மதுரை அணியில் ராம் அரவிந்த் 64, கேப்டன் சதுர்வேதி நாட் அவுட்டாக 45ரன் எடுத்தனர். 17.3ஓவரில் 3விக்கெட் இழந்து 171ரன்எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. ராம் அரவிந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று ஓய்வு நாளாகும். நாளை முதல் சேலத்தில் போட்டிகள் நடக்கிறது. அங்கு நாளை 9வது லீக் போட்டியில் சேலம்-திருப்பூர் அணிகள் மோதுகின்றன.