திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, மதுரை பாந்தர்ஸ் அணியை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபாரமாக வென்றது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 8 அணிகள் மோதும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் 9வது தொடரில் நேற்று, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மதுரை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 156 ரன் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால், டக்ளஸ் லூயிஸ் முறைப்படி, 14 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு, 114 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய சேப்பாக் வீரர்கள் 12.5 ஓவரில் 114 ரன் குவித்து எளிதில் வெற்றி பெற்றனர். சேப்பாக் அணி தொடர்ச்சியாக பெறும் 7வது வெற்றி இது.