சென்னை: பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை அரசுக்கு தெரிவிக்க ஆணை. சிசிச்சை விவரங்களை தெரிவிப்பதால் தரவுகளை ஆராய்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். ஊரக பகுதிகளில் பாம்பு கடி மருந்துகளை தேவைக்கு ஏற்ப வைத்திருப்பதன் மூலம் மரணங்களை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.