சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளராக உள்ள மணிவாசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளராக உள்ள மணிவாசனுக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல், வருவாய்த்துறை செயலாளராக உள்ள அமுதாவிற்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.