சென்னை: திருவேற்காடு நகராட்சியில் கோலடி-அயனம்பாக்கம் சாலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சாலை சேதமடைந்து இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படுவதாக மக்கள் புகார் எழுப்பிய நிலையில் சன் நியூஸில் செய்தி வெளியானது. சன் நியூஸில் செய்தி வெளியானதை அடுத்து சேதமடைந்த சாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.