திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்/ உதவி பேராசிரியர் உள்ளிட்ட 24 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1பேராசிரியர்-8 இடங்கள். பாடவாரியாக காலியிடங்கள் விவரம்: Applied Psychology- 1 (எஸ்சி), Commerce- 1 (ஒபிசி), Economics- 1 (எஸ்டி). Library and Information Science – 1 (பொது), Material Science- 1 இடம் (எஸ்டி), Music- 1 (ஒபிசி), Social Work- 1 (ஒபிசி), Tourism and Hospitality Management 1 (ஓபிசி).
2இணை பேராசிரியர்- 11 இடங்கள்: Applied Psychology- 1 (எஸ்சி), Economics- 1 (பொது), Epidemiology and Public Health- 1 (ஓபிசி), Geography- 1 (எஸ்டி), History- 2 (எஸ்சி-1, எஸ்டி-1), Library Information Science- 1 (எஸ்சி), Music- 1 (ஒபிசி), Social Work-1 (எஸ்டி), Tourism and Hospitality Management- 1 (எஸ்டி), Physical Educatiion and Sports -1 (ெபாது).
3உதவி பேராசிரியர்- 5 இடங்கள்: Applied Psychology- 1 (மாற்றுத்திறனாளி), Chemistry- 2 (பொது-1, ஒபிசி-1), Geography- 1 (பொது), Physics- 1 (எஸ்டி).
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பேராசிரியர்/இணை பேராசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் பி. ஹெச்டி பட்டமும், உதவிப் பேராசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் யுஜிசி- நெட் தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ₹750/-. எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.cutn.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தின் நகல் மற்றும் தேவையான சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Joint Registrar, Recruitment, Central University of Tamilnadu, Neelakudi Campus, Thiruvarur- 610 005.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2023.
விண்ணப்ப நகலை தபாலில் அனுப்ப கடைசி நாள்: 25.11.2023.