திருவாரூர், ஜுலை 28: தமிழகத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் டி.ஆர்.ஓக்கள் மற்றும் டி.ஆர்.ஒ அந்தஸ்தில் பணி புரிந்து வரும் 42 பேர்களை கடந்த 24ம் தேதி தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓவாக பணிபுரிந்து வந்த சிதம்பரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு மற்றும் மேலாண்மை தனி மாவட்ட டி.ஆர்.ஓவாக பணி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சண்முகநாதன் திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓவாக நியமிக்கப்பட்டார். அவருக்கு வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 4 மாதம் முன்பு திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக பணி மாறுதல் அடைந்து தற்போது திருவாரூர் டி.ஆர்.ஓவாக பொறுப்பேற்றுள்ளார். புதுகோட்டையை சொந்த ஊராக கொண்ட இவர் எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார்.